வெயிலுக்கு நடுவே மழை எச்சரிக்கை... தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வெப்பநிலைக்கு இடையே, இன்று பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செப்டம்பர் 4-ந் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.செப்டம்பர் 9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், உள் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும்.

செப்டம்பர் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் கடலோர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. பெரும்பாலும் இயல்பை ஒட்டிய வெப்பநிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம் ஒருபுறம் நீடித்தாலும், மாலை நேரத்தில் உருவாகும் மேகக் கூட்டங்களால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain warning amid sunshine Chance rain 5 districts Tamil Nadu today


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->