'அநீதியை எதிர்த்து அறம் வெல்லட்டும்'...! கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சரின் விஜய் வாழ்த்துச் செய்தி...!
Let virtue prevail over injustice Chief Minister Vijay greetings occasion of Krishna Jayanti
பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளாகக் கருதப்படும் கிருஷ்ண ஜெயந்தி, நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் புனித நாள், கிருஷ்ண பக்தர்களுக்கு மிகவும் சிறப்புமிக்க நாளாக விளங்குகிறது.
புராணங்களின் அடிப்படையில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணையும் நாளை கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடும் மரபு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் வகையில், வீடுகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்து, குழந்தைகளின் பாதச்சுவடுகளை வரைவது உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் இந்த இனிய திருநாளில் தனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.மேலும், அநீதிக்கு எதிராக அறம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடனும், எத்தகைய சவால்கள் வந்தாலும் கடமையில் இருந்து விலகாமல் செயல்பட வேண்டும் என்ற உறுதியுடனும் வாழ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயரிய நெறிகளை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் விஜய், மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தர்மத்தின் பாதையில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்பு, அறம், நம்பிக்கை, கடமை ஆகிய உயரிய பண்புகளை வாழ்வில் கடைப்பிடித்து, அனைவரும் இணைந்து அன்பும் அறமும் நிறைந்த நல்லுலகை உருவாக்குவோம் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் உணர்த்தும் அறநெறிகளைப் பின்பற்றி, சமூகத்தில் ஒற்றுமையும் அன்பும் பெருக வேண்டும் என்பதே இந்தத் திருநாளின் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது.
English Summary
Let virtue prevail over injustice Chief Minister Vijay greetings occasion of Krishna Jayanti