நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி...தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்...! இன்றைய நிலவரம்...? - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து, ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனையானது.

ஆனால், இந்த விலை சரிவு நீடிக்காமல் நேற்று தங்கத்தின் விலை திடீரென உயர்ந்தது. சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.

இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880-க்கும், ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் சந்தையின் அடுத்தகட்ட விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock for jewelry buyers Gold prices continue to rise Today situation


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->