11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!! வானிலை மையம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழையும், தென் மாவட்டங்களில் பரவலான மழையும்  பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் காலை வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் கிருஷ்ணகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for 11 districts


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal