அடுத்த 24 மணி நேரம்., இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.! சற்றுமுன் வெளியான எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் 20.02.2021; தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். 

21.02.2021: 
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

22.02.2021: 
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

23.02.2021, 24.02.2021: 
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) : 

கோத்தகிரி ( நீலகிரி ) 9 , 
குன்னூர் ( நீலகிரி ) 7 , 
சோத்துப்பாறை ( தேனி ) 6 , 
அலகாரி எஸ்டேட் ( நீலகிரி ) 5 , 
தண்டராம்பேட்டை ( திருவண்ணாமலை ) , மே மாத்தூர் ( கடலூர் ) தலா 4 , 
தழுத்தலை ( பெரம்பலூர் ) தலா 3 . 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain alert feb 21


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->