தென் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்..! - விஞ்ஞானி சிவானந்த பை பொறுப்பேற்பு - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் (தென் மண்டல வானிலை ஆய்வு மையம்) புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்பொறுப்பில் இருந்த எஸ்.பாலசந்திரன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தற்காலிகமாக பி.அமுதா கவனித்து வந்த நிலையில், தற்போது சிவானந்த பை நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், டெல்லி ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்ப பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கடந்த 1992-ம் ஆண்டு வானிலை ஆய்வுத் துறையில் பணியில் சேர்ந்த சிவானந்த பை, சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மற்றும் காலநிலை சேவைகளில் சர்வதேச தரத்திலான அனுபவம் கொண்டவர்.

புனே காலநிலை ஆய்வு மையத்தின் கூடுதல் தலைமை இயக்குநர், கேரள அரசு காலநிலை மாற்ற ஆய்வு நிறுவன இயக்குநர் மற்றும் டெல்லி புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்ட இயக்குநர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, பருவமழை மற்றும் வெப்பநிலை மாற்றங்களைக் கணிக்கும் நவீன கணினி மாதிரிகளை உருவாக்குவதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.

80-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சிறந்த சேவை விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Head Appointed Southern Regional Meteorological Centre Scientist Sivananda Pai Assumes Charge


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->