தொழிற்சாலை வரையறை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு...! - உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது - Seithipunal
Seithipunal


பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தை மையமாகக் கொண்டு எழுந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க விளக்கத்தை வழங்கியது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் பெரும் தொழிலாளர் படையையும் ‘தொழில் தகராறு சட்டம்’ என்ற சட்டத்தின் பரப்புக்குள் கொண்டு வந்து, “தொழிற்சாலை” என்ற சொல்லுக்கே விரிவான புதிய அர்த்தத்தை அளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மட்டுமின்றி குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் சட்டப்போரில் இறங்கின.

அதோடு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சேர்த்து மொத்தம் 46 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விவகாரம் மேலும் தீவிரமடைந்தது.

இந்த முக்கிய வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் ஆழமாக ஆராய்ந்து விசாரித்தது.

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கூர்மையாகக் கேட்டறிந்த நீதிமன்றம், இறுதி தீர்ப்பை உடனடியாக வழங்காமல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, பரபரப்பை தொடர்ச்சியாக வைத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Appeal Case Regarding Definition Factory Supreme Court Reserves Verdict


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->