'எதிர்க்க தைரியம் இல்லாததால் முதல்வர் திசைதிருப்புகிறார்'...! - டெல்லி புறப்படும் முன் டிடிவி தினகரன் காட்டம்...! - Seithipunal
Seithipunal


"முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை எதிர்க்கத் துணிவில்லாமல், 'டெல்லி அணி' என்று கூறி மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக மற்றும் பாஜக அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக இன்று டெல்லி புறப்பட்டார்.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தரக் கோரும் முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த நிதியை திமுக எப்படிப் பயன்படுத்தியது என்பதை விளக்க வேண்டும்.

நீட் தேர்வைக் கொண்டு வந்ததும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மௌனம் காத்ததும் திமுகதான்.

எனவே, எங்கள் கூட்டணியைப் பற்றிப் பேச அவர்களுக்குத் தகுதியில்லை" என்றார். மேலும், தேர்தல் முடிவில் திமுகவை அகற்ற மக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM attempting divert attention lack courage confront opposition TTV Dhinakaran lashes before departing Delhi


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->