பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா நியமனம்..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இளையோர் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளிலும், 62 முதல் தரப் போட்டிகளிலும் விளையாடியுள்ள பர்விந்தர் அவானா, 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி, இந்தியா 'ஏ' மற்றும் இந்திய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

பர்விந்தர் அவானா ஓய்வுக்குப் பிறகு, பயிற்சியாளர் பணியில் ஈடுபட்டு, டெல்லியின் யு16, யு19 மற்றும் யு23 அணிகளுடனும், இந்தியா யு19 அணிகளுடன் பணியாற்றியுள்ளார். இந்தக் குழுவில், கிருஷ்ண தாஸ், ராகேஷ் படேல், அர்ஜுன் யாதவ் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அஸ்ஸாம் மற்றும் கோவா வேகப்பந்து வீச்சாளரான கிருஷ்ண தாஸ், 49 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 166 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இந்தியா யு19 மற்றும் இந்தியா 'ஏ' அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

ராகேஷ் படேல் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்காக விளையாடியதுடன், இந்தியா 'ஏ' அணிக்காகவும், இது தவிர, துலீப் கோப்பை, தியோதர் கோப்பை மற்றும் இரானி கோப்பை ஆகியவற்றிலும் விளையாடியுள்ளார்.

அர்ஜுன் யாதவ் இந்தியா 'ஏ' அணிக்காக 83 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2000-ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Indian fast bowler Parvinder Awana appointed as chairman of the BCCI Junior Selection Committee


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->