மெரினாவில் சோகம்! கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 29 வயது இளைஞர் பலி...!
Tragedy at Marina 29 Year Old Man Drowns After Being Caught Waves While Bathing Sea
சேலம் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் தயானந்தன், வேலை தேடி கடந்த 16-ம் தேதி சென்னை வந்துள்ளார்.
நேற்று மதியம் மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகே தனது செல்போன் மற்றும் பணப்பையை கரையில் வைத்துவிட்டு கடலில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய தயானந்தன், கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
சிறிது நேரத்திலேயே அவர் சடலமாக கரை ஒதுங்கியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா காவலர்கள், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் குளிக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy at Marina 29 Year Old Man Drowns After Being Caught Waves While Bathing Sea