பெண்களுக்கு சற்று கவலை...! உயர்ந்த தங்கம் விலை...! இன்றைய நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகச் சரிவைக் கண்டுவந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் போன்ற காரணங்களால் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதன் தாக்கம் தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கிறது.

இதன் காரணமாக, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,21,744-க்கு விற்பனையாகிறது.மேலும், தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cause Concern Women Gold Prices Rise What Current Status


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->