புயலுக்கு பெயர் மோக்கா! எந்த நாடு வைத்தது தெரியுமா?
new cyclone make in south east Bay of Bengal Meteorological Center info
வருகிற 7ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது என்றும், இது வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த வாரம் 10-ஆம் தேதி அல்லது 11 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தற்போது ஏற்பட்டுள்ள வானிலை காரணிகளை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.

கணிப்புப்படி புயல் உருவானாலும் இது இந்த ஆண்டின் முதல் புயல் என்றும் இதற்கு "மோக்கா" என்றும் பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த பெயரை ஏமன் நாடு சூட்டியுள்ளது. இதற்கு முன்னதாக வந்த யாஸ், ஆம்பன் உள்ளிட்ட புயல்கள் "மே" மாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்தபுயல் எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதை பொருத்தே எந்த இடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்க முடியும். கடந்த காலங்களில் வங்கக் கடலில் உருவான புயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள இந்த புயலின் வழித்தடத்தை மாநில அரசு கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
English Summary
new cyclone make in south east Bay of Bengal Meteorological Center info