இன்று மாலை வலுப்பெறும் "மோக்கா புயல்".! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்...! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. 

இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இதையடுத்து வட-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாகவும் வலுப்பெறும். பின்பு 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அந்தமான் கடல் பகுதிகள்:

இன்று முதல் 12ஆம் தேதி காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் நிலவுகிறது. மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

11ஆம் தேதி காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதையடுத்து 12ஆம் தேதி மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13ஆம் தேதி மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென் மேற்கு வங்கக்கடல் (தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகள்):

இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை காலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும், 12ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும், 13ஆம் தேதி அன்று மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அதன்பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 14ஆம் தேதி மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

இன்று அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 12ஆம் தேதி அன்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அதன்பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13ஆம் தேதி மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 13ஆம் தேதி அன்று காலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் 14ஆம் தேதி காலை வரை மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meteorological Department has issued a warning to fishermen as Storm Mocha is expected to intensify this evening


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->