தமிழக மக்களுக்கு முக்கிய அலர்ட்!.. அடுத்த 5 நாட்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை ...?
Important alert people Tamil Nadu Meteorological Department warns next 5 days Which districts have rain warnings
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்க்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.வானிலை மையத்தின் கணிப்பின்படி, இன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு மற்றும் வடமேற்கு தமிழக பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.அதேநேரத்தில், நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை நகரில் இன்று வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதிக வெப்பநிலை மற்றும் கடும் வெயில் நிலவும் சூழலில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி, கோவை,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மழை தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், தேனி,திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.வரும் 25ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு,கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி கோவை, மதுரை, ஈரோடு,நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Important alert people Tamil Nadu Meteorological Department warns next 5 days Which districts have rain warnings