தமிழக மக்களே.. "அடுத்த 5 நாட்களுக்கு கொளுத்த போகும் வெயில்".. வானிலை ஆய்வு மையம் தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக,

07.04.2023 மற்றும் 08.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.04.2023 மற்றும் 10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரின இடங்களில் இடி மில்லுனுருக்குரிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள் மாவட்டங்களில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

07.04.2023 முதல் 11.04.2023 வரை:: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, தென்காசி மாவட்டம் அடவிநயினார் கோவில் அணை, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, திற்பரப்பு ஆகிய பகுதிகளில் தல ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMD announce temperature 3deg increase in next 5days


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->