மக்களுக்கு எச்சரிக்கை.! தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!
heavy rain to fifteen districts in tamilnadu
மக்களுக்கு எச்சரிக்கை.! தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!
இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாளையுடன் (செப்டம்பர் 25ஆம் தேதி) நிறைவடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வட மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, "கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதே போல் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
heavy rain to fifteen districts in tamilnadu