குடை மிஸ் பண்ணிடாதீங்க! பிற்பகல் 1 மணி வரை மழை வெளுக்கப்போகும் மாவட்டங்கள் இதோ...! - Seithipunal
Seithipunal


குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகியிருப்பதும் வானிலை மாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வளிமண்டல மாற்றங்களின் தாக்கத்தால் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாகவும், வட தமிழகத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மேக மூட்டத்துடன் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont miss your umbrella Here districts where rain expected till 1 pm


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->