தமிழகத்துக்கு ரெட் அலர்ட்.! நாள் குறித்த வானிலை ஆய்வு மையம் .! மக்களே தயாரா இருங்க.!
dec 2 red alert
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறவிப்பில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி உள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு உள்ளது.
புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.
மேலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் மாதம் 2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.