வானிலை எச்சரிக்கை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது; தமிழகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா..?
A low pressure area has formed in the Bay of Bengal the Meteorological Centre has reported
வடக்கு ஆந்திரா மற்றும்தெற்கு ஒடிசா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆகஸ்ட் 19-ஆம் தேதி கரையை கடக்கும் எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்பதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வடக்கு, தென் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
A low pressure area has formed in the Bay of Bengal the Meteorological Centre has reported