உபியில் அதிர்ச்சி: லிப்ட் கொடுப்பதாக கூறி, ஓடும் காரில் இளம்பெண் கூட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்..!
A young woman was gang-raped in a moving car in UP on the pretext of giving her a lift
உத்தர பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து விட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, நிதின் தாக்குர் என்ற 22 வயதுடைய நபர் அந்த வழியே காரில் வந்து லிப்ட் கொடுக்க முன் வந்துள்ளார்.
இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் அந்த காரில் ஏறியுள்ளார். அவரை அழைத்து கொண்டு சென்ற அந்த இளைஞர் அவரை, உரிய இடத்தில் இறக்கி விடுவதற்கு பதிலாக, அணைக்கட்டு அமைந்த பகுதியில், மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது காரில் அழைத்து சென்ற நிதினுடன் சேர்ந்து மற்றொரு நபரும் அந்த இளம்பெண்ணை ஓடும் காரிலேயே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிதினை 03 மாதங்களாக அந்த இளம்பெண்ணுக்கு தெரியும் என கூறப்படுகிறது. இதனையடுத்து, நிதின் மற்றும் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 02 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறதாக கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு காலு சிங் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
A young woman was gang-raped in a moving car in UP on the pretext of giving her a lift