03 ஆண்டுகளில் அதிர்ச்சி: ஆதிதிராவிடர் பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் விலகல்..! - Seithipunal
Seithipunal


கடந்த 03 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் இருந்து விலகியுள்ளதாக அதிர்ச்சியை  தகவல் வெளியாகியுள்ளமை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 360 தலைமையாசிரியர்கள் உட்பட 2075 பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் இவ்வாறு மாணவர்கள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகள், 108 உயர்நிலைப்பள்ளிகள், 98 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1138 பள்ளிகள் இயங்குகின்றன. 

2024-25 கல்வியாண்டில் மொத்தம் 98,124 பேர் படிக்கின்றனர். 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சம், 2022-23-இல் 1.06 லட்சம், 2021-22ல் 1.23 லட்சம் மாணவர்கள் படித்தனர். ஆனால், இந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும் போது மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்குகீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சில விபரங்களை பெற்று மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது:

'தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஆணையம் தந்த தகவல்படி மொத்தம் 2075 பணியிடங்கள் காலியாக உள்ளன. 360 தலைமையாசிரியர்கள், 483 பட்டதாரி ஆசிரியர்கள், 1060 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஆனால், ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி வெறும் 875 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அரசு மழுப்பலான பதில் அளித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்விக்கென நிதி வழங்குவதை அரசு தவிர்த்து வருகிறது. இதனால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை.

இதனால் தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் 829 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம். இதனால், பலர் பாதியிலேயே தனியார் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thousands of students have dropped out of Adi Dravidian schools in 3 years


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->