பீகாரில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கும் காங்கிரஸ்..? கூட்டணியில் குழப்பம்..!
Congress refuses to accept Tejashwi Yadav as CM candidate in Bihar
தேஜஸ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் முதல்வராக இருக்கலாம். ஆனால், ' இண்டி ' கூட்டணி இன்னும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 06 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பின்னரான ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14-இல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜ கூட்டணி விரைவில் கூடி தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய உள்ளனர். அத்துடன், வேட்பாளர்கள் குறித்து தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு நாளை கூடவுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே, இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி கூறி வருகின்ற நிலையில், இது குறித்து மற்ற கூட்டணி கட்சிகள் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ் இது குறித்து கூறியுள்ளதாவது: 'தேஜஸ்வி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் முகமாக இருக்கலாம். ஆனால், 'இண்டி' கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒன்று கூடி பேசி முடிவு எடுக்கப்படும். எந்த கட்சியாவது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதா..? இண்டி கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்வு செய்யவில்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Congress refuses to accept Tejashwi Yadav as CM candidate in Bihar