சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களின் வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு ..!
Standard guidelines to remove videos of women subjected to cyber attacks
பெண் வழக்கறிஞர் ஒருவர், தன் கல்லுாரி காலத்தில், ஆண் நண்பருடன் காதல் வயப்பட்டிருந்த நேரத்தில், அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், இணைய தளங்களில் பரப்பப்பட்டிருந்தன. அவற்றை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறித்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபால் வாசுதேவன் ஆஜராகி பேசும்போது போது, 'பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் இன்னும் ஒன்பது இணையதளங்களில் பரவி வருகின்றன,' என தெரிவித்துள்ளதோடு, அந்த இணையதளங்களின், 'லிங்க்' விபரங்களையும் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, டி.ஜி.பி., தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி குறிப்பிடுகையில், 'மனுதாரர் தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணையதளங்களின் 'லிங்க்'கள் முடக்கப்பட்டுள்ளன, என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.ரமண மூர்த்தி ஆஜராகி பேசுகையில், 'மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றும் வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது,' என தெரிவித்துள்ளதோடு, அதன் நகல்களை தாக்கல் செய்துள்ளார்.
இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் தரப்பில் புதிதாக அளிக்கப்பட்ட இணையதளங்களின் 'லிங்க்'குகளை முடக்க உத்தரவிட்டுள்ளதோடு, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
English Summary
Standard guidelines to remove videos of women subjected to cyber attacks