நள்ளிரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கி மழை...! - 9 பேர் பலி, தப்பியோடிய மர்ம கும்பல்...!
Gunfire erupts midnight nightclub 9 dead mysterious gang escaped
தென் ஆப்பிரிக்காவின் கவுத்இங் மாகாணத்தில் உள்ள பெக்ஹர்டெல் நகரில் இயங்கி வரும் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதி, இன்று அதிகாலை துப்பாக்கி மழையில் மூழ்கியது. அந்த நேரத்தில் விடுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர்.
அச்சமயம், கார்களில் வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென விடுதிக்குள் புகுந்து, உள்ளே இருந்தவர்களை இலக்காக வைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த கொடூர தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிக்கினர்.
இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதல் நடத்திவிட்டு கார்களில் தப்பிச் சென்ற 12 பேர் கொண்ட கும்பலை பிடிக்க, போலீசார் பரவலான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
English Summary
Gunfire erupts midnight nightclub 9 dead mysterious gang escaped