#BigBreaking :: தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஓட்டியே இலங்கை பகுதியில் நினைவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் திருகோணமலையிலிருந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரி ஒட்டிய கடல் பகுதியில் நாளை காலை நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. மேலும் சென்னை முழுவதும் குளிரான சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 5 செ.மீ மழையும், தண்டையார்பேட்டையில் 4 செ.மீ மழையும், நுங்கம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 districts of TN have heavy rainfall in next 3 three hours


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->