Va Varalam Va | பிரம்மாண்ட இசை வெளியிட்டு விழாவிற்கு தயாரான "வா வரலாம் வா"!  - Seithipunal
Seithipunal


தேவாவின் இசையில், எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "வா வரலாம் வா". தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி, கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ நடித்திருக்கிறார். 

இவர்களுடன் இயக்குநர்கள் சிங்கம்புலி, சரவண சுப்பையா, நடிகை தீபா, காயத்ரி ரெமா மற்றும் நடிகர்கள் வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 40 குழந்தைகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, எடிட்டிங் ராஜா முகமது என திரைத்துறையில் சாதித்த மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

தேவாவின் இசையில் இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. கருத்துள்ள கானா பாடல், இளைஞர்களுக்கான காதல் பாடல், குழந்தைகளுக்கான மிமிக்ரி பாடல், மனதை மிருதுவாக்கும் மென்மையான மெலோடி பாடல் என அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு ஈடுகொடுக்கும் வகையில், பொருத்தமான பாடல் வரிகளை காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சிறிது கால இடைவேளைக்கு பிறகு தேனிசைத்தென்றல் தேவா இசையில் வருவதால், இசை ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆல்பம் ஹிட் ஆகும் அளவிற்கு அனைத்து பாடல்களுமே சிறப்பாக வந்துள்ளதால், இசை வெளியிட்டு விழாவை பெரிய அளவில் நடத்திட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், 'வா வரலாம் வா' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி குறித்து, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான எஸ்பிஆர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வரும் 15 ஆம் தேதி (புதன்கிழமை), மாலை 6.00 மணிக்கு, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் "வா வரலாம் வா" திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்கவுள்ளது.

இந்த இசைவெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் N.முரளி (ஏ) இராமசாமி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் R. ராதாகிருஷ்ணன், S. கதிரேசன், இணை செயலாளர் S. சௌந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்கம் & பிலிம்சேம்பர் செயற்குழு உறுப்பினர் & பி.ஆர்.ஓ யூனியன் தலைவர் N.விஜயமுரளி, பெப்சி தலைவர் இயக்குநர் R. K.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க செயலாளர் இயக்குநர் R.V.உதயகுமார், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொருளாளர் இயக்குநர் பேரரசு, இயக்குநர் சித்ரா லக்ஷ்மன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சேலம் ஆர்.ஆர் பிரியாணி நிறுவனர் தொழிலதிபர் தமிழ்ச் செல்வம் மற்றும் முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள். நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va Movie Audio Launch Announce


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->