Va Varalam Va Audio Launch | 7 பேரோட வாழ்க்கையே போச்சு! நடிகர் விஷால் மீது JSK கோபி கடும் விமர்சனம்.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள  வா வரலாம் வா திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 15ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், இயக்குனர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகிஸ்தர்கள், இயக்குனர்கள் பிரபலங்களான பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் திரைப்பட விநியோகிஸ்தரான ஜே.எஸ்.கே கோபி பேசுகையில், "வா வரலாம் வா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. தேவா சார் இசையமைத்த ஒரு படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வந்தது மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். நாங்க எல்லாம் தேவா சார் பார்த்து வளர்ந்தவர்கள். ஒரு பார்வையாளராக அழைத்து இருந்தாலும் கூட நான் வந்திருப்பேன். இங்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்க நிர்வாகிகள் வந்துள்ளனர்.

அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக வருகின்றனர். படத்தைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ஆனால் அந்த படம் வெளியானதா? எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகி உள்ளது, அந்தப் படத்திற்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என கேட்பதில்லை. ஒரு சிலர் கேட்கின்றனர், ஆனால், மற்ற சங்கங்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

சமீபத்தில் மார்க்கண்டே திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு நடிகர் விஷால் அளித்த பேட்டியால் எனக்குத் தெரிந்த வட்டாரத்தில் ஏழு பேரில் வாழ்க்கை போச்சு. ஒரு கோடி இரண்டு கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கலாம் என நினைத்திருந்தார்கள். நான் விஷால் பேசிய பிறகு படம் ஆரம்பிக்க இருந்த அனைவரும் நிறுத்திவிட்டனர். அதன் பிறகு நான் விசாரித்து பார்த்தபோது ஒரு சிலர் அரசியல் ரீதியாக பேசியதாக சொன்னார்கள். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யாரும் படம் எடுக்க வராதீங்க என எதை நோக்கி கூறினார் என தெரியவில்லை.

ஆனால் விஷால் கூறியதை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். மார்க் ஆண்டனி வெற்றி பெற்றதால் நமக்கு தான் சினிமா தெரியும் என்பது அர்த்தம் இல்லை. அவர் நடிகர் சங்கத்திற்கு தலைவராக இருந்துள்ளார், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்துள்ளார், சினிமாவுக்கு அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளார். இப்படிப்பட்டவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது எனக்கு மிகவும் வருத்தம்.

இந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு சொல்ல வருவது என்னவென்றால் சினிமா ரொம்ப நல்லா இருக்கு. குறைந்தபட்சத்தில் நல்ல படங்களை வாங்கலாம். சினிமாவை நம்பி வரவர்களை சினிமா ஏமாற்றியதாக சரித்திரம் இல்லை. இந்த சூழ்நிலையில் சகோதரர் வா வரலாம் வா திரைப்படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒவ்வொருவரும் மாறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். 

அவர்கள் அனைவரும் பெரிய ஹீரோக்களின் படங்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். சின்னப் திரைப்படங்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை. தற்போது இருக்கும் அராஜப்போக்கு என்னவென்றால், ஓடிடி தள நிறுவனங்களின் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களிடம் சிறிய படங்களின் தாயேப்பாளர்கள் அணுகும் போது குறைந்தபட்சம் படத்தை வாங்குகிறோமா இல்லையா என்று கூறுவதற்கு 6 மாதங்கள் ஆகிறது.

அதன் பிறகு படம் பார்ப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதன் பிறகு முடிவு சொல்வதற்கு ஒரு வருடம் ஆகிறது. சிறிய படங்களில் தயாரிப்பாளர்களை அலைய வைத்து, படத்தை வாங்குகிறோமா இல்லையா என்று கூட சொல்லாமல் ஓடிட்டு நிறுவனங்களின் அராஜக போக்கு பெரியதாக உள்ளது. பெரிய படங்களுக்கு கமிஷன் அடிப்படையில் வியாபாரம் செய்கிறார்கள். பெயரைக் கூட ஆதாரத்தோடு என்னால் சொல்ல முடியும். 

ஆனால் இந்த நிகழ்ச்சி மூலமாக சொல்கிறேன் தயவுசெய்து மாறி விடுங்கள். நீங்கள் படம் வாங்குகிறீர்களா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்லுங்கள். தயாரிப்பாளர்களை அலைய வைக்க வேண்டாம். நீங்கள் அலைய வைக்கவில்லை என்றால் அவர் வேறு இடத்தில் முயற்சி செய்வார். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஒரு படத்தை வாங்குகிறோமா! இல்லையா என சொல்வதற்கு ஒரு வருடம் அலைக்கழித்துள்ளார். இந்த போக்கு நிச்சயம் மாற வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் சின்ன படங்கள் விநியோகத்திற்கும் ஓடிடியில் வெளியிடுவதற்கும் உதவியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flim distributer JSK Gopi criticized Vishal in va varalam va audio launch


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->