சூரிய கிரகணத்தால் நாளை உலகம் 6 நிமிடம் இருளில் மூழ்குமா? - நாசா உடைத்த உண்மை
Will world plunged into darkness for 6 minutes tomorrow due solar eclipse NASA reveals truth
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில், 'நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும். இந்த நிகழ்வு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு" என்று தகவல் வேகமாக பரவி வருகிறது.

நாசா:
இந்த கருத்துக்கு நாசா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கம் கொடுத்த நாசா,"சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் நிகழும்.இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது.
இதுவே சூரிய கிரகணம். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ இருக்கிறது. இருப்பினும் அது மிகச் சிறிய சூரியகிரகணம்தான்.இது கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் தான், இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.
இந்த குறிப்பிட்ட கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க இருக்கிறது.இருப்பினும், இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது.இதன் தாக்கம் அல்ஜீரியா, சூடான், சவுதி அரேபியா,துனிசியா, லிபியா, ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, எகிப்து, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் அதிகமாக இருக்கும்.
ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுதொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
Will world plunged into darkness for 6 minutes tomorrow due solar eclipse NASA reveals truth