வாட்ஸப் ஸ்டிக்கர் வெறியர்களுக்கு சூப்பர் அப்டேட்.! இனி இவங்கள யாராலயும் தடுக்க முடியாது.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை ஸ்டிக்கர்கலாக மாற்றி அமைத்து பிறருக்கு பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், இதை பயன்படுத்தி அந்த புகைப்பட ஸ்டிக்கரின் பின்புறத்தை மாற்றி அமைக்கவும் முடியும். வாட்ஸ் அப்பில் சிலர் எது சொல்ல நினைத்தாலும் அதை ஸ்டிக்கர் வாயிலாக சொல்ல கூடிய அளவிற்கு ஸ்டிக்கர் வெறியர்களாக இருந்து வரும் நிலையில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த அப்டேட் இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whatsap sticker may Create in app


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->