பிரைவசி பிரச்சனைகளுக்கு ஸ்டேட்டஸ் வைத்து விளக்கம் கொடுத்த வாட்சாப் நிறுவனம்.!  
                                    
                                    
                                   whats ap status about privacy issue 
 
                                 
                               
                                
                                      
                                            அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமாக வாட்ஸ்அப் இருக்கிறது. இது உலகம் முழுதும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தனது பயனாளிகள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள போவதாகவும், புதிய கொள்கையை வாட்ஸ்அப் சமீபத்தில் கூறியிருந்தது. 

பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள், இதனை ஏற்காவிட்டால் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்று அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. எனவே, மக்கள் வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து புதிய கொள்கையை அமல்படுத்துவது மே 15ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய பயனாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வைத்து இருக்கின்றது. 

இது அனைத்து பயனர்களும் காணும் வகையில் இருக்கிறது. உங்களுடைய குறுஞ்செய்தி, இருப்பிடம் உள்ளிட்ட எந்தவித தனிப்பட்ட தகவல்களையும் கண்காணிக்க மற்றும் வெளியிட மாட்டோம். உங்களுடைய தொடர்பு எண்களை ஃபேஸ்புக்-ல் பகிர மாட்டோம் என்று அந்த ஸ்டேட்டஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                     
                                 
                   
                       English Summary
                       whats ap status about privacy issue