5 ஜி சேவை.... உங்கள் செல்போனின் பேட்டரி விரைவாக காலியாகிறதா.? இதோ சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது 5 ஜி டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வருகிறது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 ஜி இணையதள சேவையை அறிமுகம் செய்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருக்கும் 80 சதவீதம் பகுதிகளுக்கு 5ஜி இணையதள கட்டமைப்பு அமைக்கப்படும் என அந்த நிறுவனங்கள் உறுதியாக கூறுகின்றன.

இந்த புதிய டெக்னாலஜி ஆனா 5 ஜி  ஹீட் ஜெனரேஷன் மற்றும் அதிகமான கன்சம்ஷன் காரணமாக நமது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரியில் சார்ஜ் விரைவாக குறைந்து விடுகிறது. 4ஜி எல்.டி.இ பயன்படுத்தும்போது அது குறைவான அளவு பேட்டரியை பயன்படுத்தியது.

நான் ஸ்டாண்டர்ட் லோன் 5ஜி நெட்வொர்க்கில் அதிவேகமான இணையதள வசதியை வழங்குவதால் இவற்றின் பேட்டரி பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக நமது செல்போன்களின் பேட்டரி  விரைவிலேயே டிரையாகி விடுகிறது. இதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நமக்கு அதிவேக இணையதள வசதிகளுக்கு மட்டும்தான் 5g இணையதள வசதி தேவைப்படுகிறது. மற்றபடி போன் பேசுவதற்கும் எஸ் எம் எஸ் அனுப்புவதற்கும் 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகளை போதுமானது. பயணத்தின் போது மற்றும் செல்போனை பயன்படுத்தாத நேரங்களில் நமது ஆண்ட்ராய்டு  கைபேசியின் செட்டிங் சென்று அதில் மொபைல் நெட்வொர்க் என்பதை தேர்ந்தெடுத்து அதில் சென்று பார்த்தால் வெவ்வேறு நெட்வொர்க் கனெக்சன்கள் இருக்கும். அந்தப் பட்டியலில் 4ஜி எல்.டி.இ என்பதை தேர்ந்தெடுக்கும் போது நமது செல்போனின் பேட்டரி விரைவாக காலியாவது குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try this if using 5G service drains your cell phone battery quickly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->