'Phone pe' பயனாளர்களுக்கு... மீண்டும் ஒரு அட்டகாசமான புதிய அப்டேட்.!
Once again Phone Pe has come up with a new update with an amazing feature what are its highlights
இன்று நமது கைபேசியிலேயே அனைத்து விதமான வசதிகளும் வந்து நமது பல பணிகளையும் எளிதாக்குவதோடு நமது நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக பண பரிவர்த்தனை செய்யும் வசதி தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.
முன்பெல்லாம் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் வங்கிக்கு செல்ல வேண்டும் அல்லது அந்த குறித்த நபரை நேரில் சென்று பார்க்க வேண்டும். ஆனால் இன்று நமது கைப்பேசியின் மூலம் ஒரே கிளிக்கில் அனைத்துமே நமக்கு சாத்தியமாகிறது.

இந்த வசதிகள் நமக்கு எளிமையாக சாத்தியமாவதற்கு முக்கிய செயலியாக இருப்பது 'போன் பே' செயலியாகும். இந்த செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு பணம் செலுத்துவது போன்ற வசதிகளும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளையும் மிகவும் எளிதாக்கி இருக்கிறது.
இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக போன் பே நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அதற்கு போன் பே லைட் என்ன பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் 200 ரூபாய் வரை பணம் செலுத்துவதற்கு நமது செக்யூரிட்டி பின் நம்பரை உள்ளீடு செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் நமது நேரம் மிச்சப்படுவதோடு நமது வேலையும் எளிதாகிறது. இந்த புதிய வசதியை பயன்படுத்த போன் பே பயனாளர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்யுமாறு அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
English Summary
Once again Phone Pe has come up with a new update with an amazing feature what are its highlights