விநாயகர் சதுர்த்தி முதல்.. வினாடிக்கு 1GB வேகம்! ஜியோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னணி தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய திட்டங்களை அறிவித்து வருகிறது.  சமீபத்தில் 5ஜி சேவை உடன் கூடிய குறைந்த விலையிலான ஜியோ பாரத் மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்தியது. 

அந்த வரிசையில் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி முதல் ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

கம்பி இணைப்பு இல்லாமல் அதிவேக இணைய சேவையை பெறுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏர்ஃபைபர் சேவை வழிவகை செய்கிறது. ஜியோ ஏர்ஃபைபர் மூலம் வினாடிக்கு 1GB வரையிலான இணைய சேவையை எந்தவித இடையூறும் இன்றி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல்வேறு சாதனங்கள் இணைப்பின் மூலம் எந்த வித சிக்கலும் இன்றி வேகமான இணைய சேவையை பெற இயலும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 5ஜி சேவை தற்போது இந்தியா முழுவதும் 94 சதவீத நகரங்களில் கிடைப்பதாகவும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் அனைவரும் ஜியோ நிறுவனத்தின் 5G சேவை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்தியாவில் ஜியோ சேவை பெறுவோரில் எண்ணிக்கை 45 கோடி பயனாளர்களை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mukesh Ambani launching Jio Airfiber service from Vinayagar Chaturthi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->