ஜியோவின் அடுத்த அதிரடி.. ரூ.999-க்கு 4G ஸ்மார்ட் போன் அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


பல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ நிறுவனத்தின் மூலம் டெலிகாம் துறையிலும் கால் பதித்து இந்தியாவின் முதல் டெலிகாம் நிறுவனம் என்ற இடத்தை பிடித்துள்ளது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிகக் குறைவான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதால் இந்த துறையில் முன்னிலை வகிக்கிறது. அந்த வரிசையில் தற்பொழுது அடுத்த அதிரடி அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டு மற்ற டெலிகாம் நிறுவனங்களை கதிகலங்க செய்துள்ளது. 

வெறும் 999 ரூபாய்க்கு ஜியோ பாரத் என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 10 லட்சம் போன்கள் வரும் ஜூலை 7ம் தேதி விற்பனைக்கு வருகிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக்குறைந்த விலையிலான இந்த மொபைலில் 4ஜி இணைய வசதிகள் உள்ளதோடு மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை விட, ஜியோ பாரத் மொபைலில் இணைய வசதிக்கான கட்டணம் 7 மடங்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களை விட 30% குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு 123 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால் அன்லிமிடெட் காலுடன் நாளொன்றுக்கு 500 எம்.பி என 28 நாட்களுக்கு 14 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஜியோ பாரத் போனில் ஜியோ சினிமா, ஜியோபே உடன் கூடிய யுபிஐ பேமண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஜியோ பாரத் மொபைலில் இடம் பெற்றுள்ளது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jio launched 4G phone for Rs999 in India


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->