நீண்ட நாட்களுக்கு பிறகு விண்ணில் சீறிப் பாயப் போகும் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட்.!
ISRO PSLV C49 Rocket Launched today
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் ஆகியவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் பூமி கண்காணிப்பு, வானிலைத் தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக நம் நாட்டிற்கு சொந்தமான செயற்கைகோள்கள் விண்ணில் நிலை நிறுத்தி வருகின்றனர். 
தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் புதிய ராக்கெட்டுகளில் எதுவும் படவில்லை. இந்நிலையில், பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான 26 மணி நேர கவுன்டவுன் நேற்று தொடங்கியது. அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் படங்களை எடுக்கும் தொழில் நுட்பம் கொண்ட சின்தடிக் அபர்சர் ரேடார் இணைக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
ISRO PSLV C49 Rocket Launched today