ட்விட்டரில் இனி வருமானம் ஈட்டலாம்- விரைவில் புது அப்டேட்!! - Seithipunal
Seithipunal


யூடியூபை போலவே ட்விட்டர் மூலமாகவும் இனி வருமானம் ஈட்டும் வகையில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றாக ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர் அவர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். இவரின் அதிரடி முடிவுகளால் பல ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கும் பல நெருக்கடிகளை கொடுத்தார் எலன் மஸ்க். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் டுவிட்டர் வீடியோக்களை ஸ்மார்ட் டிவிகளில் பார்ப்பதற்கு ஏதுவான செயலி ஒன்றை ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக எலன் மஸ்க் அறிவித்துள்ளார். 

மேலும் டுவிட்டரில் 2 மணி நேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியையும் ட்விட்டர் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் வெரிஃபைட் கணக்குகளை கொண்டுள்ள பயனாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் யூடியூபைப் போலவே டுவிட்டரில் கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்ட வசதி ஏற்படுத்தப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி ட்விட்டர் மூலமாகவும் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earn Money on Twitter - New Update Coming Soon!!


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->