முடிவுக்கு வந்தது பப்ஜி.. இந்தியாவில் இன்று முதல் முற்றிலுமாக தடை.!! 
                                    
                                    
                                   ban on PUBG from today
 
                                 
                               
                                
                                      
                                            மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் குறிப்பாக. இந்தியாவில் அதிக இளைஞர்கள் விளையாடும் பப்ஜி கேமும் நீக்கப்பட்டது. 

பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும், இதை நீக்கியதாக அறிவித்தனர். அதிக பயனாளர்களை கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் நிலைப்படுத்த தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுத்து, தாமே முழு பொறுப்பை ஏற்கும் என அறிவித்தது.
இந்நிலையில், ப்ளே ஸ்டோரிலிருந்து இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மட்டுமே இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வருகின்றனர். தற்போது, ஏற்கனவே பதிவிறக்கம் செய்தர்வர்களுக்கும், அக்டோபர் 30 முதல் பப்ஜி இயங்காது என நிரந்தர தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து, பப்ஜி நிறுவனம் கூறுகையில், டென்சென்டுடனானஎங்கள் உறவை முறித்துக் கொள்வதன் மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை நிலைப்படுத்த விரும்பினோம். பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். இந்தியாவின் பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகள் நாங்கள் இறங்குகிறோம். ஆனால், எங்கள் தனியுரிமைக் கொள்கை படி அனைத்து பயனாளிகளின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.