இந்த மாதிரி வேலைகளை கண்டிப்பாக AI -யால் செய்ய முடியாது...! - மைக்ரோசாப்ட் நிறுவனம்
AI definitely cant do this kind of work Microsoft
TECHNOLOGY -யில் பெரும் புரட்சியை செயற்கை நுண்ணறிவு அதாவது(Artificial intelligence )AI ஏற்படுத்திவிட்டது. பல முன்னணி நிறுவனங்களும் ''செயற்கை நுண்ணறிவை'' பயன்படுத்த தொடங்கிவிட்டதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் தற்போதே ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது.

இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் என்னென்ன மாற்றமெல்லாம் நிகழுமோ ? என்ற அச்சம் IT துறையினர் இடையே ஏற்பட்டுள்ளது. மேலும், ஐடி துறையினர் மட்டுமின்றி பல துறைகளிலும் AI புகுந்து விளையாடும் என்று சொல்லப்படுவதால் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.
அதேசமயம் AI பயன்பாட்டால் வேலையின் திறன் கூடும் எனவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும் செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், AI வருகையால் எந்த துறைகளில் எல்லாம் வேலை இழப்பு ஏற்படும்? எவை எல்லாம் பாதிக்கப்படாது? என்ற ஆய்வறிக்கையை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில், எலக்ட்ரிஷியன் பணி, கப்பல் பொறியாளர்கள், செவிலியர், மக்களிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, டயர் பழுதுபார்ப்பவர்கள் , உள்ளிட்ட பணிகளை AI செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ளது.
இது போன்ற சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்களின் ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் அதை எக்காரணத்தை கொண்டும் AI தொழில்நுட்பத்தில் முழுவதுமாக ஒப்படைத்துவிட முடியாது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
AI definitely cant do this kind of work Microsoft