பிரதமர் மோடி நாளை ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திராவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, ரூ.13,430 கோடி மதிப்பிலான நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் ஆந்திர பயணத்தில், அம் மாநிலத்தின் நந்தையால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளதோடு,   ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை நேரில் பார்வையிடவுள்ளார்.

அதைத்தொடர்ந்து, கர்னூலுக்கு செல்லும் மோடி, அங்கு தொழில், மின்சாரம், சாலை, ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

அத்துடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். மோடியின் ஆந்திர வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi will inaugurate projects worth Rs 13430 crore in Andhra Pradesh tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->