இளைஞர் கொலை வழக்கு: கோவை பாஜக மண்டலத் துணை தலைவர் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை..!
BJP executive from Coimbatore Kandasamy gets life imprisonment in murder case
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி நன்கொடையின் போது வசூல் தகராறில் நடைபெற்ற கொலை வழக்கில் பாஜக மண்டல துணைத்தலைவர் குட்டி என்கின்ற கந்தசாமி என்பவருக்கு கோவை கூடுதல் மாவட்டம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோயம்பத்தூர் மாவட்டம் காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட கணபதிக்காரர் தோட்டம் 07 ஏக்கர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முடிந்து அன்று இரவு கிடா விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விநாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல் குறித்து அதில் நாகராஜ் என்பவர் கந்தசாமியிடம் வசூல் சம்மந்தமாக கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நாகராஜை கத்தியால் குத்தி விட்டு கந்தசாமி தலைமறைவானார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கபட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஆலந்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது நீதிமன்றம் கொலை செய்த கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
BJP executive from Coimbatore Kandasamy gets life imprisonment in murder case