பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
12 bubble chain snatched from a woman police lay a trap for mysterious individuals
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. 42 வயதான இவர் நேற்று மாலை ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் ஒருஉணவகத்தில் உணவு பொட்டலங்களை பார்சல் வாங்கிய தமிழ்ச்செல்வி ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் ஒரத்தநாடு பி.எட். கல்லூரி அருகே தமிழ்ச்செல்வி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது இதில் நிலைதடுமாறி தமிழ்ச்செல்வி கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிய மர்ம நபர்களால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
English Summary
12 bubble chain snatched from a woman police lay a trap for mysterious individuals