மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் ஒதிங்கியுள்ள இலங்கை படகு: தீவிர சோதனையில் உளவுத்துறை..!
Intelligence is conducting intensive searches regarding the Sri Lankan boat that has anchored off the Mandapam coast
மண்டபம் அருகே, மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இலங்கை படகு ஒன்று கரை ஒதிங்கியுள்ளது. இந்த படகை கைப்பற்றிய உளவுத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு மாத்திரைகள், பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இதனை தடுக்கவும், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இங்கு வருவோரை தடுக்கவும் கடலோர பாதுகாப்பு படையினர், உளவுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடலோரப் பகுதியில் படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அதிகாரிகள் படகை கைப்பற்றி சோதனை செய்தத்தில், அதில் இலங்கையை சேர்ந்த படகு என்பது உறுதியானது. குறித்த படகு எப்போது வந்தது, அதில் வந்தவர்கள் யார்..? எத்தனை பேர் வந்தனர்..? அவர்கள் தங்க கட்டிகள் கடத்தி வந்தனரா..? அல்லது பயங்கரவாதிகளா..? என பல்வேறு கோணங்களில் ஒன்றிய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இந்த படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டிக்கலாம் என கருதப்படுகிறது. குறித்த படகை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Intelligence is conducting intensive searches regarding the Sri Lankan boat that has anchored off the Mandapam coast