ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம்..மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!
Hitachi company to invest Rs 2,000 crore Agreement signed in the presence of M K Stalin
சென்னை போரூரில் ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, போரூரில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5 வருடங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Hitachi company to invest Rs 2,000 crore Agreement signed in the presence of M K Stalin