கஞ்சா போதையில் கொடூரம்: தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று எரிக்க முயன்ற பேரன்
Youth Under Influence of Ganja Murders Grandparents Tragic Incident Near Mannargudi
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தனது சொந்த தாத்தா மற்றும் பாட்டியைப் பம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்து, பின்னர் அவர்கள் மீது எண்ணெய் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். பொறியியல் பட்டதாரியான இவர், கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, தனது தாத்தா மற்றும் பாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது கஞ்சா போதை தலைக்கு ஏறிய அந்த இளைஞர், அவர்களைப் பம்பியால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த எண்ணெய்யினை அவர்கள் மீது ஊற்றித் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. இது குறித்துக் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய போதைப் பொருட்களின் நடமாட்டம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதுடன், இவ்வாறான கொடூரக் குற்றங்களுக்கும் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இனிமேலாவது காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுப் போதைப் பொருள் விற்பனையை வேரறுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
English Summary
Youth Under Influence of Ganja Murders Grandparents Tragic Incident Near Mannargudi