ஒரே கிளிக்.!! உயிரே போச்சு.!! இன்ஸ்டாகிராம் மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை.!!
youth suicide taking loan through Instagram in thiruvarur
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவருடைய இளைய மகன் ராஜேஷ் கும்பகோணத்தில் முன் கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மொபைல் மூலம் ஆன்லைன் கடன் வழங்கும் செயலியில் அடிக்கடி கடன் பெற்று வந்துள்ளார்.
இவர் கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரம் லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் கடன் வழங்கும் செயலியை பயன்படுத்தி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடன் தொகையையும் அவர் ஒரு வருடத்திற்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கிய நிறுவனத்தினர் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷை தொடர்பு கொண்டு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ராஜேஷுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை மாஃபிங் செய்து நிர்வாணமாக மாற்றி அதை ராஜேஷுக்கு அனுப்பி பணம் வழங்குமாறு மிரட்டியுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த ராஜேஷ் மீட்ட உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது ராஜேஷை பரிசோதித்த தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் ராஜேஷ் பயன்படுத்திய செல்போனை காவல்துறையினர் ஆராய்ந்ததில் அவருக்கு வந்த வாட்ஸப் கால் அனைத்தும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்க பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் கடன் பெற்று அதன் மூலம் மிரட்டப்பட்டு மன உளைச்சலால் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வலங்கையமான் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth suicide taking loan through Instagram in thiruvarur