மயிலாடுதுறையில் சோகம் - திருமணமாகாத விரக்தி.!! வாலிபர் எடுத்த விபரித முடிவு.!
youth sucide in mayiladuthurai
மயிலாடுதுறையில் சோகம் - திருமணமாகாத விரக்தி.!! வாலிபர் எடுத்த விபரித முடிவு.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் ஆறுமுகம். சமையல் கலைஞரான இருவருக்கு நாற்பது வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.
இதனால், வாழ்க்கையே வெறுத்துப்போன நிலையில், இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன் படி, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்த அவர் மயிலாடுதுறையில் இருந்து கோயமுத்தூர் செல்லும் ஜனாசதாப்தி தினசரி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதில் தலை துண்டிக்கப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி விரைந்து வந்த போலீஸார், தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் ரெயில் முன்பு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
English Summary
youth sucide in mayiladuthurai