மயிலாடுதுறை : இறால் பிடிக்கும் போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு.
youth died for electric shoct attack in seerkazhi
மயிலாடுதுறை : இறால் பிடிக்கும் போது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே ஓலக்கொட்டாயமேடு கிராமத்தில் இறால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பண்ணையில் முதிர்ச்சி அடைந்த இறால்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில், தாண்டவன்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பண்ணையில் இருக்கும் தண்ணீரை மறு சுழற்சி செய்யும் இயந்திரங்களுக்காக இயங்கிக் கொண்டிருந்த ஜெனரேட்டர் மின் இணைப்பிலிருந்து திடீரென தண்ணீரில் மின்சாரம் கசிந்துள்ளது. இதனால் ஹரிஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த பண்ணை உரிமையாளர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருபது வயது இளைஞர் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
youth died for electric shoct attack in seerkazhi