காதல் தோல்வி: விஷம் குடித்த வாலிபர்... சேலத்தில் பரிதாபம்...!
Youth commits suicide due to love failure in salem
சேலம் மாவட்டத்தில் காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் வடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மணிவேல் (26), சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் நெல் அறுவடை இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மணிவேல், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், தற்போது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து விட்டதாக கூறிவிட்டு செல்போன் தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் உடனடியாக மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்பு மணிவேல் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணிவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth commits suicide due to love failure in salem