திருவண்ணாமலை || முப்புதரில் கிடந்த பள்ளி மாணவி சடலம் - விசாரணையில் சிக்கிய காதலன்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை || முப்புதரில் கிடந்த பள்ளி மாணவி சடலம் - விசாரணையில் சிக்கிய காதலன்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி மகள் ரேணுகா. 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 23-ந் தேதி அதே கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன அவரது பெற்றோர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக மாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில் ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த பாரதி நகர் நீலமேகம் என்பவரின் மகன் யோகேஸ்வரனிடம் செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை வைத்து யோகேஸ்வரனை  பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மாணவி ரேணுகாவை கொலை செய்தது தெரிய வந்தது.

அதன் முழு விவரம் வருமாறு:- யோகேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். யோகேஸ்வரனும், ரேணுகாவும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேற்று முன்தினம் சென்னாவரம் கிராமத்தில் தனிமையில் சந்தித்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த யோகேஸ்வரன், ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். 

பின்னர் ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பிஓடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு ரேணுகா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குற்றவாளியான யோகேஸ்வரனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for kill girl friend in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->