காவல் நிலையத்தில் போட்டோ எடுத்து, பேஸ்புக்கில் மிரட்டல்... சிறப்பாக கவனித்த காவல்துறை.!!
Youngster arrest by police in Mayiladuthurai due to Facebook violent post
மணல்மேடு பகுதியில் காவலரின் தொப்பியை அணிந்து முகநூலில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் சிவா.
இவர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், அங்குள்ள வரவேற்பு பகுதியில் நின்றவாறு காவலரின் தொப்பியை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தனது முகநூலில் பதிவேற்றமும் செய்துள்ளார்.
இது குறித்த குறித்த முகநூல் பதிவுகளில், காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை தொப்பியை அணிந்து அணிய முடியுமா? அதிகமாக கோவம் வந்தால் காவல்துறை நபர்களை கொலை செய்துவிடுவேன் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும், இதேபோன்ற மற்றொரு பதிவில், " இந்த ஜென்மத்தில் எவனும் எங்களை ஒன்றும் செய்ய இயலாது " என்றும் பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவுகளை கண்ட காவல் துறையினர், புகைப்படங்களை ஆத்திரமாக கொண்டு சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Youngster arrest by police in Mayiladuthurai due to Facebook violent post